ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல், 20 அப்பாவி மக்கள் பலி..
ஏமன் நாட்டில் 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள அதிபர் மன்சூர் ஹாதி படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் மோதி வருகின்றனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் அதிபர் அப்துல்லா சலே ஆதரவாளர்கள் துணை நின்று வந்தனர். அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த மாதம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கும் இடையேயான கூட்டணியில் திடீரென பிளவு ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உள்ளது.
இந்த நிலையில், அதிபருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள சவுதி கூட்டுப்படைகள், செங்கடல் துறைமுக நகரான ஹொதேய்தா நகரின் மீது நேற்று முன்தினம் திடீரென கடுமையான வான் தாக்குதல் நடத்தின.
மக்கள் நெரிசல் மிகுந்த ஓட்டல் அருகே நடந்த இந்த வான் தாக்குதலில் 3 வாடகை கார்கள் சிக்கிக்கொண்டன. அந்தக் கார்களில் இருந்த அப்பாவி மக்கள் 20 பேர் பலியானார்கள். அவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த 26-ந் தேதி டாயிஸ் மாகாணத்தில் சவுதி கூட்டுப்படைகளின் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் 40-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இப்போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்