RK.நகர் தேர்தல் முடிவுகள் முதல் சுற்று நிலவரப்படி டி.டி.வி தினகரன் .RK நகரில் முன் நிலை
LIVE PLEASE WATCH
தமிழகத்தை மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ள ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் கட்டம் கட்டமாக வெளியாக உள்ளது. சுமார் 18 கட்டமாக இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க உள்ளார்கள். இத் தேர்தலுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்று பலர் கேட்க்கக் கூடும். அதாவது சசி கலாவின் கணவர், நடராஜன் ஒரு தீவிர ஈழ ஆதரவாளர். சசி கலாவின் ஆட்சி தமிழகத்தில் இருந்தால், அது ஈழத் தமிழர்களுக்கு சார்பான போக்கை கொண்டிருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. இந்த சசிகலாவின் அணியில் தான் தினகரன் உள்ளார். இதனால் இவர் இத்தேர்தலில் வென்றால், தற்போது பிரிந்துள்ள அதிமுக அணி ஆட்டம் காணும். அங்கே இருந்து பலர், தினகரன் பக்கம் சாயக் கூடும் என்பது ஒரு புறம் இருக்க.
திமுகா கூட ஈழ தமிழர்கள் ஆதரவான போக்கை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தோடு திமுகவில் தற்போது மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இணைந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் ஸ்டாலின் தரப்பு வென்றாலும். அது அடுத்து வரும் தமிழக அரசு தேர்தலுக்கான வெற்றியின் அறிகுறியாக கருதப்படும். இந்தவகையில் சர்வ முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள், இந்திய நேரப்படி காலை 8 மணி முதல்(லண்டன் நேரப்படி அதிகாலை 3 மணி) யில் இருந்து கட்டம் கட்டமாக வெளியாக உள்ளது. அதிர்வின் தமிழக செய்தியாளர் வாக்கு எண்ணும், நிலையத்தில் இருந்து நேரடியாக தகவல்களை எமக்கு நேரலையாக வழங்க உள்ளார்.
எனவே அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள் மக்களே. சசிகலா அணியின் "தினகரனா" , அதிமுக பன்னீர் செல்வ அணியின் மது சூதனனா இல்லை திமுகவா வெற்றி பெரும் என்பதனை இன்னும் சில மணி நேரங்களில் பார்த்து விடலாம்... இது இவ்வாறு இருக்க, புலம் பெயர் ஈழத் தமிழர்கள் யாரை விரும்புகிறார்கள் என்பதனை கீழ் காணும் வாக்கு போடும் அட்டையில் உங்கள் வாக்குகளை போடுங்கள்... எது சரி என்று பார்கலாம்...


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்