ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 27 பேர் பலி..
ராஜஸ்தான் மாநிலம் சபாய் சவாய் மதோபூர் நகரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்கோட் நோக்கி பேருந்து புறப்பட்டு வந்தது. துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றிற்குள் விழுந்தது. இதனால் பேருந்து தண்ணீரில் மூழ்கியது. உள்ளே இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் கயிறு கட்டி பொக்லைன் எந்திரம் மூலம் வெளியே இழுத்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்