Header Ads

எடுத்த உடன் முகத்தில் குத்தும் வெள்ளைக்காரன் - மாட்டிக் கொண்ட ஆசிய இன இளைஞர்: வைரல் வீடியோ



லண்டன் தெருக்களில் தற்போது நடைபெறும் அசம்பாவிதங்களை பார்த்தால். ஆபிரிக்க காடுகளில் கூட இப்படி நடக்காது என்று நினைக்க தோன்றும். நேற்று முன் தினம் வேனில் சென்ற 2 பேர், சற்றும் சம்பந்தம் இல்லாத இளைஞர் ஒருவரோடு சண்டையிட்டு. அவரை தாக்கி. இறுதியில் தமது வாகனத்தால் அவரை இடித்து சாய்த்த காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள். வேனில் சென்ற அவர்கள், ஒரு இடத்தில் அவர்களது வேனை திருப்பும் போது. அங்கே நடந்து வந்த ஆசிய நாட்டு இளைஞர் ஒருவர், ஏதோ வாக்கு வாதப்பட்டுள்ளார்.



இதனை அடுத்து வேனில் இருந்து இறங்கிய அவ்விருவரும். அந்த இளைஞனை சரமாரியாக தாக்கிவிட்டு. பின்னர் தமது வேனால் அவரை இடித்து சாய்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கவனிக்க தவறிய விடையம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால். அத்தெருவில்  இருந்த CCTV கமரா தான். தற்போது பொலிசாருக்கு எல்லா தகவலும் கிடைத்து. அவர்களை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். ஆனால் எமது பிள்ளைகள் எந்த அளவு பாதுகாப்பாக லண்டன் தெருக்களில் செல்ல முடியும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பிழையாக வாகனத்தை ஓட்டிய ஒருவரை பார்த்து அவர் செய்த தவறை சுட்டிக் காடினால்/ உடனே முகத்தில் குத்துகிறார்கள்...

என்ன கலாச்சாரம் இது ? தெரியவும் இல்லை புரியவும் இல்லை. போலந்து காரன், ரொமேனியாக் காரன், துருக்கி காரன் என்று பல்லின மக்கள் கூடி வாழும் லண்டனில் எதுவேண்டும் என்றாலும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. இதுவே யதார்த்தம் ஆகும். இறுதியா அதிர்வு இணையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாக்கப்பட்ட இளைஞர் ஒரு மாணவன் என அறிய முடிகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.