தெற்கு ஆசியாவில், அணு ஆயுத போர் வெடிக்கும்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.
தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் நசீர் கான் ஜனுஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா பல்வேறு பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
அதனால், தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைத்தன்மை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆசியாவில், அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா என்ன கொள்கையை பின்பற்றுகிறதோ, அதையே அமெரிக்காவும் பின்பற்றுகிறது.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால், அமெரிக்காவுக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக முடிவு செய்த பின்னரே பயங்கரவாத செயல் அதிகமாகியுள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்க நாங்கள் அதிக விலை கொடுத்துள்ளோம். இருந்தாலும் உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
சீனாவும் ரஷ்யாவும் எழுச்சி பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனை தடுப்பதற்கே சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார திட்டங்களுக்கு இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா சதி செய்கிறது, என்றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்