மருத்துவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட மது..
உத்தரபிரதேசம் மாநிலம் மீருட்டில் உள்ள லாலா லாஜ்பத் ராய் அரசு மருத்துவக்கல்லூரி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது ரஷ்யாவைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள் பெல்லி நடனம் ஆடினர். மது பாட்டில்கள் கொண்டு வர ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்களும் நடனம் ஆடினர். இச்சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவகல்லூரி முதல்வர் பேசுகையில், 'மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மது அருந்தியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மது பாட்டில்களை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் இங்குள்ளது தானா அல்லது தனியார் மருத்துவமனைக்கு உரியதா? என்பது விரைவில் கண்டறியப்பட வேண்டும்' என அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்