ஒரு நாள் டாக்டராக பணிபுரிந்து பாருங்கள்.. முதல்வன் திரைப்படப் பாணியில் பிரதமருக்கு வேண்டுகோள்..
சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ராஜஸ்தான் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உங்களை நாட்டின் பிரதமராக பெற்றமைக்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த நாங்கள் உங்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றோம். வெள்ளை உடையை அணிந்துகொண்டு, அரசு மருத்துவமனையில் டாக்டராக ஒரு நாள் பணிபுரிந்து பாருங்கள். நாங்கள் எந்த அளவிற்கு மன அழுத்தத்தால்பா திக்கப்படுகின்றோம் என்று உங்களுக்கு தெரிய வரும்.
மேலும் பல்வேறு பற்றாக்குறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு காரணமாக சுகாதார சேவை அமைப்பு இறந்துகொண்டு வருகிறது.
ராஜஸ்தான் டாக்டர்கள் கடந்த டிசம்பர் 16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஸ்மா சட்டத்தின் மூலம் 86 பேரை கைது செய்தது. முன்னதாக ராஜஸ்தான் அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. அதனால் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ராஜஸ்தான் அரசிற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்