குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை, வெட்டிக்கொலை செய்த தம்பி.. பரபரப்புச் சம்பவம்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னக் கோட்டக் குப்பம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24) கூலித்தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், 3 வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
அய்யப்பனின் தம்பி ஆறுமுகம் (20) இவர் அதே பகுதியில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் மது குடித்து விட்டு வந்து தனது மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் பிரியா கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அய்யப்பனுடன் குழந்தை மகேஸ்வரி இருந்தாள்.
மனைவி பிரிந்து சென்ற நிலையிலும் அய்யப் பன் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள வில்லை. இதனால் குழந்தை மகேஸ்வரியின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அய்யப்பனின் தம்பி ஆறுமுகம் தனது பராமரிப்பில் மகேஸ்வரியை வளர்த்தார். அவளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அய்யப்பன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தாய் அஞ்சலாச்சி மற்றும் தம்பி ஆறுமுகத்திடம் குழந்தை மகேஸ்வரியை என்னுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் 2 பேரும் எங்காவது சென்று பிழைத்துக் கொள்கிறோம் என்றார். ஆனால், குழந்தை மகேஸ்வரியை கொடுக்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இதனால் அவர்களிடம் அய்யப்பன் தகராறு செய்தார். அப்போது ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து தனது அருகில் கிடந்த அரிவாளை எடுத்து அய்யப்பனின் கழுத்து, மார்பு, வயிறு உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆறுமுகம் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி சென்ற ஆறு முகத்தை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் புதுவை செல்வதற்காக சின்ன கோட்டக்குப்பம் பஸ் நிலையத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்