Header Ads

பிரதமர் மோடியை சந்தித்து, வாழ்த்து பெற்ற விராட் கோலி - அனுஷ்கா ஜோடி..

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

4 ஆண்டு கால காதலுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில், புதுமண தம்பதி இன்று இந்தியாவுக்கு திரும்பிய நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.