Header Ads

சம்பளத்தை மட்டும் அல்ல, படவாய்ப்புக்காக இதையும் குறைக்க தயார்.. அஞ்சலி திடீர் முடிவு..

நடிகை அஞ்சலி 2006-ம் ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு பல விருதுகளை வாங்கி கொடுத்தது.

பிறகு,  2008-ம் ஆண்டு அங்காடித்தெரு என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் தான் வெளிபடுத்திய எதார்த்தமான நடிப்பின் காரணமாக பல விருதுகள் இவருக்கு கிடைத்தன. தேசிய விருது வாங்கிவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அஞ்சலி

இந்நிலையில், இவர் நடிப்பில் பலூன் திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது. மேலும், காண்பது பொய், காளி, ரோசாப்பூ போன்ற படங்களில் நடித்து வரும் அஞ்சலிக்கு மார்கெட் கொஞ்சம் டல் அடிக்கிறது. இதனால், சம்பளத்தை குறைக்கும் முடிவிற்கு வந்திருந்தார் நடிகை அஞ்சலி. தற்போது, பட வாய்ப்புக்காக உடல் எடையையும் குறைக்க முடிவு எடுத்துள்ளார். சமீபத்தில் உடல் பெருத்து கொளுக்கு மொளுக்கு என இருக்கும் அஞ்சலி. புதிய படங்களில் வாய்பை பெற உடல் எடையை குறைக்க திட்டமிட்டு அதற்க்கான பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.