கார் விபத்து ஏற்படுத்தியவரை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்த நீதிபதி உத்தரவு!
அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் பாதசாரிகள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய ஆப்கானிஸ்தான் அகதி மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை (23) கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மாகாண காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மெல்போர்ன் கார் தாக்குதல் தொடர்பாக சயீத் நூரி என்ற 32 வயது நபர் மீது கொலை முயற்சி மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சனிக்கிழமை நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சயீத் நூரி ஜாமின் கோரவில்லை என்றும் நீதிமன்ற வளாகத்தில் அழுதுகொண்டு நின்றதாகவும் தனது தாயாரை பார்த்து உணர்ச்சிவசப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி அவரை மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்