தந்தையை, உருட்டு கட்டைகளால் அடித்துக் கொன்ற மகன்..
ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை காலனியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது60). இவரது மனைவி செல்வி (50). இவர்களுக்கு சத்தியமூர்த்தி (29) என்ற மகன், சரண்யா, சவுமியா என்ற மகள்கள் உள்ளனர்.
ராமராஜூக்கு சொந்தமாக 1.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதை அடமானம் வைத்து ரூ. 1 லட்சம் பணம் கொடுத்தால் தொழில் தொடங்குவேன் என்று சத்தியமூர்த்தி கூறி வந்தார்.
ஆனால் நிலத்தை விற்க முடியாது என்று ராமராஜ் கூறிவிட்டார். இதனால் தந்தை- மகன் இடையே கடும் வாக்கு வாதம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கியதில் ராமராஜின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே சத்தியமூர்த்தி தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சத்தியமூர்த்தியை தேடினர். அப்போது அவர் அடிக்கடி வீட்டிற்கு செல்போன் செய்து வந்தார். இதை போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று சத்தியமூர்த்தி பூண்டி அருகே உள்ள திம்மபூபாலபுரம் காட்டு பகுதியில் ஒளிந்திருந்ததை போலீசார் கண்டு பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்