Header Ads

வடகொரியாவுடன் சமாதான பேச்சுக்களை, உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்..


வடகொரியாவுடன் சமாதான பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்

கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் அபாயத்தை தவிர்ப்பதற்கான சமாதான முயற்சிகளுக்கு அவசரத் தேவை காணப்படுவதாக ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ஜெப்ரி ஃபெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கு விஜயம் செய்த ஜெப்ரி ஃபெல்ட்மன், அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில், வடகொரியாவிலிருந்து சீனாவுக்கு நேற்றைய தினம்  திரும்பியுள்ள ஜெப்ரி ஃபெல்ட்மன் இந்த கலந்துரையாடலர் தொடர்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைத் தொடர்ந்து, தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிலைமையானது, சர்வதேச ரீதியில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய ஆபத்தாக அமையுமென்பது தொடர்பாக வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இதனை வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.