Header Ads

வருங்கால மனைவி, இப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்..

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கும் பிரபாஸ் தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்றாலும் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

இந்த நிலையில் தனது எதிர்கால மனைவி பற்றி கூறியுள்ள பிரபாஸ், “எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு அழகான பெண் வேண்டும் நான் விரும்பவில்லை. செயற்கை தனம் இல்லாத நல்ல குணம் கொண்ட பெண் தான் முக்கியம். அதுபோன்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.