பணம் கொடுக்காததால், தலைமை ஆசிரியயை பள்ளிக்குள் சென்று தாக்கிய நபர்..
பெங்களூருவில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியயை ஒருவர் ராமகிருஷ்ணப்பா என்ற கந்துவட்டிக்காரனிடம் பணம் வாங்கியுள்ளார். குடும்ப
சூழ்நிலை காரணமாக நான்கு மாதங்களாக வட்டி செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ராமகிருஷ்ணப்பா நேற்று பள்ளியினுள் நுழைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்ற அவர் ஆசிரியயை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியயை ஆஷா போலீசில் புகார் அளித்தார். பள்ளி சிசிடிவி கேமராவில் பதிவை சோதனை செய்த போலீசார் ராமகிருஷ்ணப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணப்பாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆஷா பேசுகையில், 'ராமகிருஷ்ணப்பா பணம் கொடுக்க கூறி மிரட்டினார். பின்னர் கையில் இருந்த கயிற்றால் அடிக்க ஆரம்பித்தார். என்னை விட்டு விடுங்கள் என கதறினேன்' என கூறினார்.
வட்டி பணம் கொடுக்காத ஆசிரியயை பள்ளிக்குள் நுழைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்