Header Ads

நத்தாரிற்கு மதிய உணவாக, தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை உண்ணவுள்ள பெண்..!


நத்தாரிற்கு மதிய உணவாக  தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை உண்ணவுள்ள பெண்!

இறந்த தனது தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை, நத்தார் பண்டிகையன்று மதிய உணவாக உண்ணப் போவதாக பெண்ணொருவர், தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்துள்ளமையால், இங்கிலாந்தின் கென்ற்(Kent) பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் கென்ற்(Kent) பகுதியைச் சேர்ந்த தனது இரு குழந்தைகளுடன் வசித்து வரும் டெப்ரா பர்சன்(Debra parsons) என்பவரது தாய் கடந்த மே மாதம் இருதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறு இறந்த தனது தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை, நத்தார் பண்டிகையன்று மதிய உணவாக உண்ணப் போவதாக அவர் தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
தான் இவ்வாறு கூறுவதால் மக்கள் தன்னை மனநலம் குறைந்தவரென்று கூறுவார்களென தெரிந்தும் அதனைத் தான் கண்டுகொள்ளப்போவதில்லையெனவும், அவரது தாய் தன்னுடன் இல்லாததால் மலரவிருக்கும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு தனக்கு கவலையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே,நத்தார் பண்டிகையன்று பாதுகாத்து வைத்திருந்த தனது இறந்த தாயின் சாம்பலை அவர் தயார் செய்யும் ஒவ்வொரு உணவிலும் சேர்க்கப் போவதாகவும், அதனைச் சாப்பிடுவதன் மூலம் அவர் தன்னுள் இருப்பதாக உணர முடியுமென்றும், சுவாசிக்கும் போது தனது தாயும் சுவாசிப்பது போல் இருக்குமென்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.