Header Ads

அனுமதி மறுக்கப்பட்டதால், ஆஸ்பத்திரி வளாக கால்வாயில் பிரசவித்த பெண்..

ஓடிசா மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள கால்வாய்க்குள் அமர்ந்து கர்ப்பிணி பெண் பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஸ்பத்திரி வளாக கால்வாயில் பிரசவித்த பெண்- ஒடிசாவில் அவலம்

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேருவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை அனுமதிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கேண்டின் அருகே இருந்த கால்வாயினுள் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உடனடியாக சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.