Header Ads

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், முக்கிய பயங்கரவாதி மரணம்..

தலீபான் இயக்கத்தின் துணை அமைப்பான ஹக்கானி பிரிவின் தளபதி ஜமியுதினை குறிவைத்து இத்தாக்குதல் நடந்தது.

காரில் சென்று கொண்டிருந்த அவர், செல்போன் அழைப்புக்கு பதில் அளிக்க காரை நிறுத்தினார். அப்போது, ஆளில்லா விமானத்தில் இருந்து 2 ஏவுகணைகள் பாய்ந்து வந்து தாக்கின. இதில், சம்பவ இடத்திலேயே ஜமியுதின் பலியானார். இத்தகவலை ஹக்கானி இயக்க செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ஜமியுதின் கூட்டாளியும் பலியானதாக கூறப்பட்ட தகவலை அவர் மறுத்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.