ஒபாமாவின் கழிவறையை சுத்தம் செய்ய தகுதியற்றவர் ட்ரம்.. அமொிக்க பத்திரிகைகள்..
அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மேற்கொண்டு வரும் அரசியல் பொருளாதார செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் செய்திப் பத்திரிகைள் விமர்சித்துள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கழிவறையை சுத்தம் செய்வதற்குக் கூட தகுதியற்றவர் என்று முன்னணி பத்திரிகையான யு.எஸ். ருடே தனது ஆசிரியர் தலையங்கத்தில் கூறியுள்ளது.
பொண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பலரை காங்கிரஸில், செனட்டர்களாகவும் தன்குரிய ஆதரவாளர்களாகவும் வைத்திருக்கும் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் வர்ணித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டபிள்யு புஸ்ஷின் காலணியை சுத்தம் செய்வதற்கும் டொனாலட் ட்ரம்பிற்கு தகுதி இல்லையெனவும் யு.எஸ். டுடே தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதே டொனால்ட் ட்ரம் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த குற்ற்ச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனநாயக கட்சியின் பெண் உறுப்பினர், கிரிஸ்டன் கில்லிபாராண்ட் தனது ரூவீட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த 54 பெண் உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்பியமை குறித்தும் தனது ரூவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவின் மற்றுமொரு முன்னணி பத்திரிகையான நியுயோர்க் ரைம்ஸ், ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்துள்ளதுடன், டொனாலட் ட்ரம் தனிமைப்படும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்கள், ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற அறிவிப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைக்காமை மற்றும் அலாபா மாநிலத்தின் செனட் சபை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோய் மூர் தோல்வியடைந்தமை போன்ற விடயங்கள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வடகொரியா போருக்கான ஏற்பாடுகள் தாமதிக்கலாம் எனவும் அவதானிகள் கூறியுள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்