Header Ads

கறுப்­பான மோடி சிவப்­பாக மாறு­வ­தற்­காக, ஒரு நாளைக்கு ரூ. 4 இலட்­சத்­துக்கு சாப்­பி­டு­கிறார்.

பிர­தமர் மோடி சிவப்­பா­கு­வ­தற்­காக தினமும் 5 காளான்கள் சாப்­­பி­டு­கிறார். ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபா என குஜராத் மாநில காங்­கிரஸ் தலைவர்  அல்பேஷ் தாகூர் தெரி­வித்­துள்ளார்.

குஜராத் சட்­ட­சபை தேர்தல் பிர­சார கூட்­டத்தில் குஜராத் காங்­கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.

அப்­போது அவர் கூறி­ய­தா­வது,

மோடிஜி சாப்­பி­டு­வதை உங்­களால் சாப்­பிட முடி­யாது. ஏன் என்றால் அது ஏழை­களின் உணவு அல்ல என்று ஒருவர் என்­னிடம் கூறினார். அப்­படி என்ன அவர் சாப்­பி­டு­கிறார் என்று கேட்டேன். காளான்கள் என்றார். காளான்கள் தான் எளிதில் கிடைக்­குமே என்று நான் கூறினேன்.

காளான்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் மோடி சாப்­பி­டு­வது தைவானில் இருந்து வர­வ­ழைக்­கப்­ப­டு­கி­றது. ஒரு காளானின் விலை 80 ஆயி­ரம்­ ரூபா. அவர் தினமும் 5 காளான்கள் சாப்­பி­டு­கிறார். ஆக நாள் ஒன்­றுக்கு கிட்­டத்­தட்ட. 4 இலட்சம் ரூபாவை காளான்­க­ளுக்கு மட்­டுமே செலவு செய்­கிறார் என்றார் அந்த நபர்.

மோடி குஜராத் முதல்வர் ஆனதில் இருந்து விலை உயர்ந்த காளான்­களை தினமும் சாப்­பி­டு­கி­றாராம். 35 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எடுக்­கப்­பட்ட மோடியின் புகைப்­ப­டத்தை பார்த்தேன்.

35 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மோடி என்னை போன்று கறுப்­பாக இருந்­துள்ளார். ஆனால் தற்­போது சிவப்­பா­கி­விட்டார். மோடி காளான்­க­ளுக்கு மட்டும் நாள் ஒன்­றுக்கு ரூ. 4 இலட்­சமும், மாதத்­திற்கு ரூ. 1 கோடியே 20 இலட்­சமும் செலவு செய்­கிறார் என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.