Header Ads

குடிபோதையில், தாயை சுட்ட துப்பாக்கிச் சூடு வீராங்கனை..

தெற்கு டெல்லி டிபென்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(47). துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் தூங்குவதற்கு முன்னர் மாத்திரைகளை சாப்பிட்ட இவர் மதுவும் அருந்தினார்.

நள்ளிரவு வேளையில் திடீரென்று தனது கைத்துப்பாக்கியால் தாய் மற்றும் சகோதரரை நோக்கி சுட்டார். சங்கீதாவின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட சங்கீதா அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.