Header Ads

நடுரோட்டில் சண்டை போட்ட பெண்களை, கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்..

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் சில பெண்கள் நடுரோட்டில் சண்டைப்போட்டு கொண்டிருந்தனர். சொத்து தகராறு காரணமாக ஆரம்பித்த சிறிய சண்டை பெரியதாகியது. இரண்டு குழுக்களை சேர்ந்த பெண்கள் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து சண்டை போட்டனர். இதனை ரோட்டில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்கள் சண்டை போடுவதை பார்த்து கொண்டிருந்தார். திடீரென சண்டையிட்டு கொண்டிருந்த பெண்களை தாக்க ஆரம்பித்தார். பெண்களை சரமாரியாக அடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சண்டையை நிறுத்தினர்.

ஆட்டோ டிரைவர் பெண்களை நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.