Header Ads

82 வயதிலும், துப்பாக்கி சுடுதலில் சிறந்து விளங்கும் மூதாட்டி..

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியான சந்தரோ தோமர் துப்பாக்கிசுடுதலில் சிறந்த வீராங்கணையாக திகழ்ந்து வருகிறார். 25 க்கும் மேற்பட்ட தேசிய அளவிளான தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், உலகின் மிக வயதான துப்பாக்கிச்சுடுதல் வீராங்கணை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதுகுறித்து சந்தரோ தோமர் பேசுகையில், 'நான் 65 வயது முதல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஈடுபட்டு வருகிறேன். என்னை துப்பாக்கி பாட்டி என்று அழைப்பார்கள். இந்த வயதிலும் நான் சரியாக குறிபார்த்து சுடுவேன். நான் மிகவும் கவனமாக விளையாடுவேன்' என கூறியுள்ளார்.

மூதாட்டியின் துப்பாக்கிச்சுடும் திறனை கண்டு அனைவரும் வியக்கின்றனர். அவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை கண்டு பல பெண்கள் துப்பாக்கிசுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மூதாட்டி ஒரு முன்னுதாரணமாக உள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.