காரில் கடத்தி பெண் கற்பழிப்பு, டிரைவர் உள்பட 2 பேர் கைது..
மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த காஷிமீராவில் இருந்து தானே நோக்கி பிரபல தனியார் வாடகை கார் நிறுவன காரில், 32 வயது பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காரில் டிரைவரின் நண்பர் ஒருவரும் இருந்தார். இந்த நிலையில், காரை டிரைவர் வஜ்ரேஸ்வரி பகுதிக்கு திருப்பி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினார்.
மேலும், அந்த பெண்ணை இருவரும் மிரட்டி அவரது செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். பின்னர், அந்த பெண்ணை காருக்குள் வைத்து டிரைவர் கொடூரமாக கற்பழித்தார். இதற்கு அவரது நண்பர் உடந்தையாக இருந்தார். பின்னர் அந்த பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜூக்கு கடத்திச் சென்றனர்.
போலீசில் புகார்
லாட்ஜ் மேலாளரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அந்த பெண் கதறி அழுதார். அதற்குள் டிரைவர் தனது நண்பருடன் அங்கிருந்து காரில் தப்பி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கார் டிரைவரின் பெயர் சுரேஷ் பாண்டூரங் (வயது 32) மற்றும் அவரது நண்பர் உமேஷ் ஜஸ்வந்த் (31) என்பது தெரியவந்தது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்