Header Ads

மத்திய மந்திரி நாக்கை வெட்டுவோருக்கு, ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு.. எங்கு தெரியுமா..?

கர்நாடகாவில் இருந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனந்த் குமார் ஹெக்டே (வயது 49).

சமீபத்தில் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்து கொண்டு பேசும்பொழுது, தங்களை மதசார்பற்றவர்கள் என சிலர் கூறும் ஒரு புதிய கலாசாரம் பிரபலமடைந்து வருகிறது.

ஆனால் நான் ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவன் அல்லது லிங்காயத் அல்லது பிராமின் அல்லது இந்து என பெருமையுடன் ஒருவர் கூறினால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஏனெனில் தனது ரத்தம் பற்றி அவர் அறிந்திருக்கிறார்.  ஆனால் மதசார்பற்றவர்கள் என தங்களை பற்றி கூறி கொள்பவர்களை நான் எப்படி அழைப்பது என தெரியவில்லை. தங்களது பெற்றோர் வழி பற்றி அறியாதவர்களே தங்களை மதசார்பற்றவர்கள் என கூறி கொள்கின்றனர்.  அவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது.  அவர்களுக்கு பெற்றோர் வழி பற்றியும் தெரியாது.  ஆனால் அவர்கள் புத்திசாலிகள் என கூறினார்.

இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் கலபுரகி பஞ்சாயத்து உறுப்பினரான குருஷாந்த் பட்டிடர் கூறும்பொழுது, மத்திய மந்திரி ஹெக்டேவின் நாக்கை வெட்டி ஒரு மாதத்திற்குள் (ஜனவரி 26) அதனை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு தருவேன்.  ஏனெனில் அவரது கருத்துகள் தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதசார்பற்ற மக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

அரசியலமைப்பை ஹெக்டே சிறுமைப்படுத்தி உள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல் மந்திரி சித்தராமையா, அரசியலமைப்பை அவர் படிக்கவில்லை.  அவருக்கு அரசியல் மொழி தெரியவில்லை என கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.