Header Ads

யாழில் கஞ்சா பாவித்த 17 வயது மாணவன்: கையை அடித்து முறித்த தந்தை- பின்னர் என்ன நடந்தது.



படிப்பதாக சொல்லி, தனது அறையை பூட்டிவிட்டு நெடு நேரமாக இருந்த தனது மகன் மீது சந்தேகம் கொண்டுள்ளார் தந்தை. யாழில் உள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்க்கும்  இந்த மாணவனின் அறைக் கதவை பலவந்தமாக திறந்து உள்ளே சென்ற தந்தைக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. கஞ்சாவை பொடி பொடியாக்கும் மிக்ஸர்(கையால் இயக்கப்படும் ஒரு கருவி) மற்றும் பீடி துண்டு போல சுற்றப்பட்ட சிகரெட். இவை அனைத்தும் பாட புத்தக பையில் இருந்துள்ளது.

இதேவேளையில் கஞ்சா அடித்த போதையில், மகன் சிரித்த வண்ணம் இருந்துள்ளார். இதனை பார்த்த தந்தை, தும்பு தடி ஒன்றை எடுத்துவந்து அதனால் அடித்துள்ளார். தடுக்க வந்த 15 வயது  தங்கை மற்றும் அம்மாவையும் அவர் தாக்கியுள்ளார்.  இதனால் காயம் அடைந்த 17 வயது மாணவன், யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ள்ளார்.

இதேவேளை கஞ்சா பாவித்த மாணவனின் அப்பா ஒரு அரச அதிகாரி எனவும். அம்மா ஒரு டீச்சர் எனவும் அறியப்படுகிறது. இவர்களால் கூட மகனை ஒழுங்காக வளர்க்க முடியாத நிலை யாழில் காணப்படுகிறது. பள்ளி மாணவர்களே தமது நண்பர்களுக்கு கஞ்சாவை பழக்கி வருகிறார்கள். இதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் யாழில் பிள்ளைகளை பெற்ற பலர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அலையும் நிலை தான் இன்று உள்ளது. 

1 comment:

  1. RAW திட்டமிட்டு ஈழத்தில் தமிழர்களை குறி வைத்து கலாச்சார சீர்கேட்டை விளைவிக்கிறது.....

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.