கொலையை மறைக்க 12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த சீன வாலிபர், உண்மையில் பேசும் திறனை இழந்தார்..
சீனாவில் ஷீஜியாங்கில் என்ற கிராமத்தில் ஸெங் (வயது 33) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி மற்றும் மாமாவை கொலை செய்து விட்டு கடந்த 2005-ம் ஆண்டு கிராமத்தை விட்டு வெளியேறினார். கிராமத்தை விட்டு வெளியேறிய ஸெங் தனது பெயரை மாற்றிக்கொண்டு வேறு ஒரு மாகாணத்தில் கட்டுமானதுறையில் வேலை செய்து வந்தார். அங்கு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தை ஆனார். கொலையை மறைப்பதற்காக தான் ஒரு ஊமை என்று கடந்த 12 ஆண்டுகளாக நாடகமாடி வந்தார்.
கொலை தொடர்பாக ஸெங்கை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். அவரது டி.என்.ஏ சோதனையில் கடந்த 12 ஆண்டுகளாக மனைவி, மாமாவை கொன்று விட்டு தப்பி ஓடியவர் என்று விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கொலையை மறைக்க தொடர்ந்து 12 வருடமாக பேசாமல் இருந்ததால் அவரால் இனி பேச முடியாது என்று செய்திகளில் வெளியாகி உள்ளது. பேச முடியவில்லை. நான் முட்டாள் எதையும் சொல்ல போவதில்லை என்று போலீசாருக்கு எழுதி காட்டினார்.
ஸெங் தண்டிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்