வங்காளதேசம்: முன்னாள் மேயர் இறுதி சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி..
வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் நகரின் முன்னாள் மேயரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான மொகதீன் சவுத்ரி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இவர் மூன்று தடவை சிட்டகாங் மேயராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அவருடைய குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் முறைப்படி சடங்குகள் நடத்தினர். இந்த நிகழ்வில் பல பகுதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஜமால் கான் பகுதியில் நடைபெற்ற இறுதி சடங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்