Header Ads

03 பெண்களை திருமணம் செய்த பெண் கைது..!!!

இந்தியா - ஆந்திராவில் பெண் ஒருவர் ஆணைப் போல் வேஷமிட்டு, மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஈடுகலபாடு கிராமத்தை சேர்ந்த 18 வயதான பெண்  ஆண்களை போல் வேஷமிட்டு மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே வெளியூரில் வேலை இருக்கிறது என கூறி தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் மூன்றாவதாக மோனிகா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மோனிகாவிற்கு தனது கணவனின்  நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மோனிகாவின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிறட்கமைய குறித்த நபரை கைது செய்து விசாரணை நடாத்திய போது அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் ஊர்ஜினமாகியுள்ளது.

ஆண் வேடமிட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது பெண் எனவும் அவரின் பெயர் ரமாதேவி எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஆண் வேடமிட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது பணத்திற்காகவா? அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவா? என்கிற கோணங்களில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.