Header Ads

பிரிட்டனில், நடுவானில் விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து..! அனைவரும் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

லண்டன்: பிரிட்டனில் விமானமும்- ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் அந்நாட்டு நேரப்படி நன்பகல் 12.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மோதி வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது.

சம்பவ இடத்திற்கு தேம்ஸ்வெய்லி போலீசார் விரைந்தனர்.

நடுவானில் மோதிய விமானம் ஹெ லிகாப்டரின் பாகங்கள் கிடைந்ததை போலீசார் உறுதி செய்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.