பிரித்தானியாவில் இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்த, டாக்சி ஓட்டுனர்..!
பிரித்தானியாவில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை வீட்டில் சேர்ப்பதாக கூறி ஏமாற்றி டாக்சி ஓட்டுனர் ஒருவர் கற்பழித்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஸ்வான்சீ பகுதியில் குறித்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ நாள் அன்று, பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் நண்பர்களுடனான பார்ட்டிக்கு பின்னர் இரவு தள்ளாடிய நிலையில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக தமது பணி நேரம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் குறித்த டாக்சி ஓட்டுனர் கடார் ஷாகின், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
தம்மிடம் டாக்சிக்கான பணம் இல்லை என தெரிவித்த நிலையில், இலவசமாக குடியிருப்பில் கொண்டு சேர்ப்பதாகவும் அந்த இளம்பெண்ணிடம் இவர் வாகுறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த இளம்பெண்ணை ஷாகின் தமது குடியிருப்புக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் கண் விழித்த அவர் தாம் நிர்வாணமான நிலையில் கிட்டப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் தாம் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த அவர், தமது குடியிருப்புக்கு திரும்பிய உடன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஷாகின் தங்கியிருந்த குடியிருப்புக்கு விரைந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்றை கைப்பற்றினர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 40 வயதான ஷாகின், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன் அவர் பாலியல் தொழிலாளி எனவும் உறவுக்கு பின்னர் 20 பவுண்டு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது உண்மை இல்லை என நிரூபணமானதும் தமது குற்றத்தை ஷாகின் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு யூலை மாதம் 4-ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வங்களதேசத்தை சேர்ந்த ஷாகினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்