Header Ads

அமெரிக்க கடற்படை விமானம் பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்தது: 11 பேர் கதி என்ன?

தீவு கூட்டமான பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் இன்று பறந்து கொண்டிருந்தது. வழக்கமான பயிற்சிக்கு பின்னர் அங்குள்ள அமெரிக்க கடற்படையின் ரொனால்ட் ரீகன் போர் கப்பலில் தரை இறங்குவதற்காக சென்ற அந்த விமானம் நிலை தடுமாறி ஒக்கினாவா தீவின் தென்கிழக்கே கடலில் விழுந்தது.

இவ்விபத்து பற்றி அறிய வந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.