Header Ads

மது அருந்­து­வ­தற்கும், பாடல்­களைப் பாடு­வ­தற்கும் தடை விதித்த, கிம் யொங்..!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மது அருந்­துதல் மற்றும் பாடல்­களைப் பாடுதல் என்­ப­வற்­றுடன்  தொடர்­பு­பட்ட கூட்­டங்­க­ளுக்கு தடை விதித்­துள்ளார்.
நாட்டு மக்கள் மீதான கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிக்கும்  செயற்­பாட்டின் அங்­க­மா­கவே  அவர் மேற்­படி நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார். அவர் நேற்று முன்தினம் திங்கட்கி­ழமை  தென் கொரிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு புல­னாய்வுத் தக­வல்­களை வழங்­கிய பின்  உரை­யாற்­று­கையில்  மேற்­படி தடைகள் குறித்து அறி­விப்பு செய்தார். 
“அவர் (வட கொரியத் தலைவர்)   மது அருந்­துதல்,  பாடல் பாடல் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்ட கூட்­டங்­க­ளுக்கும் களி­யாட்­டங்­க­ளுக்கும்  தடை விதித்­துள்­ள­துடன்  வெளி தக­வல்கள் தொடர்­பான கட்­டுப்­பாட்டை பலப்­ப­டுத்­தி­யுள்­ள­ார்" என தென் கொரிய தேசிய புல­னாய்வு சேவை கூறு­கி­றது. வட கொரி­யா­வா­னது சில மாதங்­க­ளுக்கு முன் நில­விய கடும் வரட்­சி­யான காலத்தின் போது பையொங்யாங் பியர் பானத் திரு ­வி­ழாவை  இரத்துச் செய்­தி­ருந்­தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.