Header Ads

ஆசியாவின் எதிர்காலம், வடகொரியாவிடம் பிணைக்கைதியாக சிக்கிவிடக்கூடாது..! டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..

வியட்நாமின் கடற்கரை நகரான தனாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 

வடகொரியாவை குறிப்பிட்டு ஒரு சர்வாதிகாரியின் வன்முறை ஆக்கிரமிப்பு மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் திரிக்கப்பட்ட கற்பனையில் இந்த பிராந்தியமும், இங்குள்ள அழகான மக்களின் எதிர்காலமும் பிணைக்கைதியாக சிக்கிவிடக்கூடாது. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை நோக்கி வடகொரியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகப்பெரிய அபாயமாக எடுத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக இந்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். 
 
இந்தோ–பசிபிக் பிராந்தியத்தின் எந்த நாட்டுடனும் பரஸ்பர மரியாதை மற்றும் பயன்கள் அடிப்படையில் வர்த்தகத்துக்கு தயார் என்றும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். வடகொரியாவுடன் நெருங்கிய வர்த்தக உறவை கொண்டிருக்கும் சீனாவும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். 

1 comment:

  1. Every Asian dont listen this old dog Trump, all Asians must support North Korea and their Young Leader Kim Un, North Korea is last Hope to save this world and Our Family Intergrated Asian Culture from PORNO Dirty Country America, if not All Asian Will be Slave to USA and Western.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.