அமெரிக்காவில் ரஷ்யா ஊடகத்தின் மீது தாக்குதல் - புடின் சொன்ன வார்த்தை?
அமெரிக்காவில் செயல்படும் ரஷ்ய ஊடகத்தின் மீது சட்டரீதியான தாக்குதல் நடத்துவதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் RTஎனும் சேட்டிலைட் தொலைக்காட்சி ரஷ்ய முதலீட்டோடு இயங்கி வருகிறது. அதை வெளிநாட்டு முகவர் எனும் பெயரில் பதிவு செய்யுமாறு அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இது பாரபட்சமான நடவடிக்கை என அந்த தொலைக்காட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியட்நாமில் ஆசிய – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய அதிபர், தங்கள் நாட்டு ஊடகத்தின் மீதான சட்ட ரீதியான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது பத்திரிக்கை உரிமை, கருத்துரிமையை நசுக்கும் செயல் என்றும் புதின் குற்றம்சாட்டினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்