எகிப்தில் தீவிரவாத தாக்குதல்:10 பேர் பலி
எகிப்தில் ஐஎஸ் இயக்கத்தின் கூட்டாளிகளான அன்சர் பெய்ட் அல்-மக்திஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.
இதுகுறித்து எகிப்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், எகிப்தில் மத்திய பகுதியிலுள்ள சினாய் மாகாணத்திலுள்ள ராணுவ அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பத்து பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் ராணுவ அலுவலகத்திலிருந்த ஆயுதங்களும் கடத்தப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஐஎஸ் இயக்கம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
எகிப்தின் உள்ள சினாய் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் எகிப்து அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியது முதல், அங்கு பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் எகிப்தின் மேற்குப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்