Header Ads

முன்னாள் மாடல் அழகிக்கு சித்ரவதை, கணவர் மீது பரபரப்பு புகார்..


மும்பையை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி ரேஷ்மி(வயது42). இவரது கணவர் ஆஷிப்(47). இவர்கள் இருவரும் கடந்த 2005–ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆஷிப் இஸ்லாமியர் ஆவார். ரேஷ்மி இந்து மதத்தை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

 இந்தநிலையில், இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி ஆஷிப் தன்னை உடல் ரீதியாக சித்ரவதை செய்து வருவதாக பாந்திரா போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார். கடந்த 12 வருடங்களாக மதம் மாறும்படி சித்தரவதை செய்கிறார் என குறிப்பிட்டு உள்ளார். 

சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாந்திரா காவல் நிலையத்திற்கு ரேஷ்மி தலையில் இரத்த காயத்துடன் வந்தார். அழுதுக்கொண்டே இந்த புகாரை கொடுத்தார் என மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பண்டிட் தாக்கரே கூறிஉள்ளார். மதம் மாற மறுத்ததன் காரணமாக தன்னை ஆஷிப் தாக்கியதாக ரேஷ்மி கூறிஉள்ளார். புகாரில், இரண்டாவதாக ஆஷிப் அவரது வயதில் பாதி வயதுடைய இந்து மதத்தை சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணையும் அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக தன்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் தெரிவித்து உள்ளார். 

இரண்டாவதாக ஆஷிப் திருமணம் செய்துக் கொண்ட பெண் மதம் மாறிவிட்டார் எனவும் தெரிவித்து உள்ளார். 

 இதற்கு ஆஷிப்பின் நண்பர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

நாங்கள் குற்றச்சாட்டை விசாரித்து வருகிறோம், முழு விசாரணையும் முடிந்த பின்னர் நாங்கள் நடவடிக்கையை எடுப்போம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.