சர்ச்சையில் சிக்கியுள்ள திரைப்படத்துக்கு, வித்தியாசமான முறையில் ஆதரவு தெரிவித்த ரம்யா..
பாலிவுட் சினிமாவில் தன்னுடைய படைப்புகள் மூலம் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்த கூடியவர் சஞ்சய் லீலா பஞ்சாலி.
தற்போது அவர் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூரை வைத்து பத்மாவதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்பட வேலைகள் ஆரம்பமான முதலில் இருந்தே பெரிய பிரச்சனைகள் வெடித்து வருகிறது.
படத்திற்காக பல சினிமா கலைஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் பிரபல தொகுப்பாளினி ரம்யா பத்மாவதி படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அப்படத்தில் வரும் காஸ்டியூம் போல ரம்யா உடை அணிந்து அந்த புகைப்படத்தை பத்மாவதி படத்திற்கு எனது ஆதரவு என பதிவு செய்துள்ளார்.
அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா வா இது இப்படி லுக்கா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்