உலகின் மிகவும் அரியவகை சிறுத்தை, மலேசிய காடுகளில்..!
கோலாலம்பூர்: உலகின் மிகவும் அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தைகள் மலேசிய காடுகளில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேகத்திட்டுக்கள் போல் காட்சியளிக்கும் உரோமங்களை கொண்ட மேகவர்ணச் சிறுத்தைகள், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும், இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்திலும் மட்டும் காணப்படும். தற்போது இவை அழிவின் விளிம்பில் உள்ளது. வேட்டையாடுதல் மற்றும் காடுகளை அழித்தல் காரணமாக இவ்வகை சிறுத்தைகள் உலகம் முழுவதும் தற்போது 700 மட்டுமே மிஞ்சியுள்ளன.
இந்நிலையில் மலேசியாவின் டெரமாகட் வனப்பகுதியில் பெண் சிறுத்தை ஒன்றும் அதன் இரு குட்டிகளும் பாதை ஒன்றில் நடந்து செல்வதை வனஉயிரின புகைப்படக் கலைஞர் மைக்கேல் கார்டன் படம் பிடித்துள்ளார். பகல் நேரத்தில் இவ்வகை சிறுத்தைகளை காண்பது அதிலும் அதன் குட்டிகளோடு காண்பது என்பது மிகவும் அரிது என மைக்கேல் கார்டன் கூறியுள்ளார். மலேசிய வனப்பகுதியில் கடந்த 2010ம் ஆண்டில்தான் மேகவர்ணச் சிறுத்தை பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்