Header Ads

பெற்ற அம்மாவை உயிரோடு தீ வைத்து எரித்த மகள்! காரணம்?

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மாவை உயிரோடு தீ வைத்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45), இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார்.


பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன் (21), தனியாக வசித்து வருகிறார். கற்பகஜோதி ஒரு தனியால் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்கு உடன் பணிபுரிகின்ற ஒருவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தாய் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் தன்னுடைய மகளிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.

ஆனால் ஜோதி காதலை கைவிட முடியாது என்று அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த கற்பகஜோதி மண்ணெண்ணையை எடுத்து தாயார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் பாக்கியலட்சுமி அலறி துடித்துள்ளார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புகாரின் பேரில் போலீசார் கற்பகஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.