Header Ads

லண்டனில் ரெட் சிக்னலில் பாய்ந்த நபரை மறித்து முகத்தில் குத்திய பொலிசார்- வைரல் வீடியோ



லண்டனில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ரெட் சிக்னலில் வாகனத்தை ஓட்டிச் சென்றார் என்பதற்காக. அவரது வாகனத்தை துரத்திப் பிடித்த பொலிசார். ஓட்டுனரை வெளியே இழுத்து நிலத்தில் வைத்து கை விலங்கிட்டுள்ளார்கள். ஆனால் அங்கே நின்ற பொலிசாரில் ஒருவர் சந்தேக நபர் மீது 4 தடவை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார்.

இதனை ரகசியமாக போனில் பதிவு செய்த நபர்,  ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இதேவேளை பொலிசார் இந்த இளைஞர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். அது என்னவென்றால் இவரே தம்மை தாக்கினார் என்பது தான். ஆனால் நடந்துள்ள விடையத்தை பார்த்தால், பொலிசார் தான் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதனை உடனே விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.