Header Ads

மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் ஓட்டம்; தலைமையாசிரியர் கைது..


திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்துள்ள இலஞ்சியில் அரசு உதவி பெறும் தனியார் இருபாலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழாசிரியராக ராஜ்ஞானம் 45, பிளஸ் 2 மாணவிகளுக்கு தமிழ் டியூசன் எடுப்பதாக தினமும் அவரது வீட்டிற்கு வரவழைத்தார். அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். 

இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகத்திடம் புகார் அளித்தனர். தலைமையாசிரியர் அதனை கண்டுகொள்ளவில்லை. இ்ந்நிலையில் மாணவியிடம் தமிழாசிரியர் சில்மிஷம் செய்த விவகாரம் தெரியவர பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழாசிரியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசில் அளித்த புகாரின் பேரில், தலைமையாசிரியர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாளாளர் சண்முகவேல் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.