Header Ads

கார் விபத்தில் சிக்கிய, பிரபல நடிகை..!

பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர். தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கருட வேகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் ஷிவானி. இப்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
ஷிவானி நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நவநிர்மான் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை வேகமாக ஓட்டிவந்த ஷிவானி சாலையில் இருந்த வேகத் தடையை கவனிக்கவில்லை. இதனால் திடீர் வேகத்தடையால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு காரின் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் ஷிவானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
சேதமடைந்த காரின் உரிமையாளர் ஷிவானி மீது ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.