புதுப்பெண் தீயில் கருகி மர்ம மரணம்..! புதுமாப்பிள்ளையை கொல்ல மைத்துனர் முயற்சி.
மயிலாடுதுறை : நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தை சேர்ந்தவர் வினோத்(25). விவசாயி. இவருக்கும் தலைஞாயிறை சேர்ந்த சிவகாமசுந்தரிக்கும்(21) திருமணமாகி 10 மாதங்களாகிறது. இந்நிலையில் வினோத் தலை தீபாவளிக்கு மனைவியுடன் தலைஞாயிறில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது வினோத்துக்கு தீபாவளி சீர் வரிசை முறையாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் வினோத் தகராறில் ஈடுபட்டார். இதன்பின் வினோத் மனைவியுடன் தனது வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தனது அறைக்கு சிவகாமசுந்தரி தூங்கச்சென்று விட்டார். அதிகாலை 2 மணியளவில் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு அலறினார்.
வினோத்தும், அவரது தாய் விமலாவும் (55) சிவகாமசுந்தரி உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் 2 பேரும் காயமடைந்தனர். ஆனால் சிவகாமசுந்தரி வீட்டிலேயே உடல் கருகி இறந்தார். தகவலறிந்த சிவகாமசுந்தரியின் உறவினர்கள் நேற்று காலை பதறியடித்து ஓடிவந்தனர். அங்கு அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
குத்தாலம் போலீசார் சிவகாமசுந்தரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அப்போது, அவரது உறவினர்கள் சடலத்தை எடுக்க கூடாது. சிவகாமசுந்தரியை தீவைத்து எரித்து கொன்றுவிட்டனர். எனவே சப்-கலெக்டர் வந்து விசாரணை நடத்திய பின் சடலத்தை எடுக்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனர். உடனே சப்-கலெக்டர் பிரியங்கா அங்கு வந்து சிவகாமசுந்தரி மரணம் குறித்து விசாரணை நடத்தினார்.
இதை தொடர்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த வினோத்தும், அவரது தாய் விமலாவும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலையில், சிவகாமசுந்தரியின் அண்ணன் பூவரசன், தங்கை சாவுக்கு காரணமான வினோத், அவரது தாயாரை தாக்குவதற்காக கத்தியுடன் மருத்துவமனை அறைக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.
இதனை கண்ட இன்ஸ்பெக்டர் அழகேசன், பூவரசனை பிடித்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியால் இன்ஸ்பெக்டர் கையில் குத்தினார். உடனே மற்ற போலீசார் பூவரசனை பாய்ந்து பிடித்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் அழகேசன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பூவரசனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிவகாம சுந்தரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தீவைத்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்