Header Ads

வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் வரி செலுத்த வேண்டும்.. இது என்ன புதுக் கொடுமை.?


சண்டிகர்: நகர்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பசு, எருமை மாடுகள், நாய், பூனை, குதிரை, பன்றி போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் நவஜோத் சிங் சித்து வெளியிட்ட அறிவிப்பில், பஞ்சாப் மாநிலங்களில் நகர்புறங்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளான பசு, எருமை மாடுகள், நாய், குதிரை, பன்றி ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின்படி, நாய், பூனை, பன்றி, ஆடு, மான் ஆகியவற்றை வீட்டில் வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.250 வரியாகவும், எருமை, எருதுகள், பசு மாடுகள், ஒட்டகம், குதிரை, யானை போன்றவற்றை வளர்பவர்கள் ஆண்டுக்கு ரூ.500 வரியாகச் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வரி செலுத்தப்படும் ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்பட்டு, பிராணிகளின் கழுத்துப்பட்டையில் வரி செலுத்தப்பட்டதற்கான உரிமமும், மைக்ரே சிப்பும் பொருத்தப்படும் என்று கூறியுள்ளார். பிராணிகளுக்கான உரிமத்தை ஆண்டுதோறும் அதன் உரிமையாளர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக வளர்ப்பு பிராணிகளுக்கு பஞ்சாப் அரசு தான் வரி விதிதத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.