Header Ads

பள்ளிக்கு சென்ற 6ம் வகுப்பு மாணவி நடு ரோட்டில் வைத்து கழுத்து அறுப்பு!


அவினாசியில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் கழுத்து அறுத்தனர். இதனையடுத்து மாணவி அவினாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி நம்பியாம்பாளையத்தை சேர்ந்தவர் காயத்ரி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மாணவியை மீட்டு அவினாசி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவி கழுத்து அறுத்த சம்பவத்தால் அவினாசி பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.