4 ரூபாய் சில்லறைக்காக 40 வயதுடைய நபரை துரத்தி துரத்தி வெட்டி கொன்ற இளைஞன் :அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் ஆம்லேட் விற்பனையாளர் 4 ரூபாய்க்காக வாடிக்கையாளர் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் நாலாசோப்ரா பகுதியில் உள்ள ஆம்லேட் கடையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்டதற்கு 24 ரூபாய் பில் வந்துள்ளது.
ஆனால் அவரிடமோ 20 ரூபாய் தான் இருந்துள்ளது. இதனால் அவர் தன்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது, 4 ரூபாய் இல்லை என்று கூறியுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில் அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை ஆம்லேட் விற்பனையாளர் வெட்டியுள்ளார்.
இதனால் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்