Header Ads

ஜேர்மனியின் பெர்லினில் பணத்துக்காக அகதிகள் விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமை!

ஜேர்மனியின் பெர்லினில் இளம் வயதுடைய அகதிகளை பாதுகாப்பு ஊழியர்கள் பணத்துக்காக அதிகளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் தனியார் தொலைகாட்சி சேனலான ZDF தான் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இளம் வயது அகதிகள், சிறுவர், சிறுமிகள் தான் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள்.

அகதிகள் விடுதி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் அங்கு தங்கியிருக்கும் அகதிகளிடம் பணம் கொடுப்பதாக கூறி விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள்.

இதற்கான கமிஷன் தொகையை ஊழியர்கள், சம்மந்தபட்டவர்களிடம் வாங்கி கொள்கிறார்கள்.

16 வயதிலிருந்து அதற்கு அதிகமான வயதுடைய அகதிகள் தான் இவர்களின் குறியாக உள்ளது. இளம் வயது அகதிகள் அதிக விலைக்கு போகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒரு அகதியை விபச்சாரத்தில் தள்ளினால் தனக்கு €€20 பணம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 20 வயது ஆண் அகதி கூறுகையில், பாதுகாப்பு ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து பணம் சம்பாதிக்க நினைக்கிறாயா என கேட்டார்.

ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் €€30லிருந்து €€40 வரை சம்பாதிக்கலாம் என கூறினார்.

இது அவமானமாக இருந்தாலும், பணம் சம்பாதிக்க வேறு வழி தெரியவில்லை என கூறியுள்ளார்.

பெர்லின் ஒருங்கிணைப்பு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் பேசிய நபர் இந்த விடயம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். இது சம்மந்தமான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஐரோப்பியாவுக்கு செல்லும் இளம் அகதிகளில் 75 சதவீதம் பேர் பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை திருமணம் போன்ற விடயங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.