Header Ads

என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான், அதனால்தான் அந்த இளைஞனை கொலை செய்தோம்..

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவருடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்ததாக இளம்பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை அரசரடியை சேர்ந்த கரிகாலன், இவரது நண்பர் சேதுராமன், இருவரும் கோவையில் குளத்தூரில் அருகே வசித்து வருகின்றனர்.
கரிகாலன் தனது மனைவியான சுகந்தியை கடந்த 21ம் திகதி கோவைக்கு அழைத்து வந்துள்ளார், 22ம் திகதி கரிகாலன் வெளியில் சென்றுவிட குடிபோதையில் இருந்த சேதுராமன் சுகந்தியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அவரிடம் எப்படியோ தப்பித்த சுகந்தி, நடந்த சம்பவம் குறித்து கரிகாலனிடம் கதறி அழுதுள்ளார்.


இதில் கரிகாலனுக்கும், சேதுராமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது, கோபத்தில் கரிகாலன் அரிவாளால் சேதுராமனை வெட்டினார்.
அங்கிருந்து தனது மனைவியுடன் தப்பித்து சென்றார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூலூர் பொலிசார் விசாரணை நடத்தினர்.
சுகந்தியிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார், பொலிசிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் என் பெற்றோருடன் ஈரோட்டில் வசித்து வருகிறேன்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நானும், கரிகாலனும் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
குளத்தூரில் தனியாக இருந்த போது, சேதுராமன் தவறாக நடக்க முயன்றார், இதை என் கணவரிடம் கூறியதும் தகராறு ஏறு்பட்டது.
குடிபோதையில் இருந்த சேதுராமனின் கைகளில் நான் பிடித்துக் கொண்டேன், என் கணவர் சரமாரியாக வெட்டினார்.
சடலத்தை போர்வையில் சுற்றி வீசிவிடலாம் என நினைத்தோம், அதற்குள் வீட்டு உரிமையாளர் வந்ததால் தப்பி ஓடினோம்.
பொலிசார் எங்களை பிடித்துவிட்டனர் என கூறியுள்ளார், இதனை தொடர்ந்து சுகந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சிறையில் அடைத்தனர்.ஷ
தலைமறைவான கரிகாலனை பொலிசார் தேடி வருகின்றனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.