பாவமெல்லாம் பார்க்கவேண்டாம்!! இருக்கும் அனைத்தையும் தயார் செய்யுங்கள்!! தாக்குவதற்கான திகதி இது ! ஜனாதிபதி 'கிம்' உத்தரவு
ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இது என்றும் வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டது.
பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான்,
தென்கொரியா முதலான நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டும் என வடகொரிய இராணுவ விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்